உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

25.02.25 ஆக்கம் 178 நம்பிக்கை அன்று நம்பிக்கையே தும்பிக்கை போலானது இன்று அவநம்பிக்கை அணைக்கின்ற கடுஞ் சூழலானது நாகரீக உலகில் பயங்கரம் பயணிக்க நடந்தவை நடப்பவை நினைத்திடவே நீந்தி வர முடியாதென மனம் தழும்புகிறது நாட்டு நடப்பெல்லாம் நீதியின்றிய அநீதியே நடுவர் முன்னே நரபலி கண் கட்டிய நீதி தேவதை வெந்து போய் நம்பிக்கையை நொந்து திட்டித் திட்டிக் கதறி அழுதது அநாகரீக வழியில் களம் சேர்க்க மெல்லக் காய் நகர்த்தும் ஆழமான கழுகுகள் அடாவடித்தனம் மீண்டும் தலைதூக்கி போராடும் இரத்த வெறியில் இரக்கம் அற்ற நம்பிக்கை வேண்டுமென மானிடரில் நினைந்திடுமா ? ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து