உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

10.09.24 ஆக்கம் 158 வலி வயிற்றுக் குத்து வராதவனுக்கு வேதனை வலி என்னவென்று தெரியவே தெரியாது கரு பத்து மாதம் சுமந்த தாய்க்கு பெற்றெடுத்த சிசு பார்த்ததும் பிரசவ வலி புரியவே புரியாது தெரு விபத்து நிகழ்ந்து கை கால் முறிந்து உறுப்பு சிதையும் வரை மரண வலி அறியவே அறியாது விதம் விதமான வலி பதம் பார்க்கும் பலி மத வெறி, காதல் பறி, அரசியல் முறிவு, துரோகக் குறி துரத்த இன்னுமின்னும் மாந்தர் சுமக்கும் மனவலி மாறா வடுக்களாய் நெரித்திடுமே ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து