உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

௦6.08.24 ஆக்கம் 156 அர்ச்சுனா இது இன்றைய ஏக்கம் அது அன்றைய தாக்கம் எதுவுமின்றிய கலக்கம் தஞ்சம் தந்த கொஞ்சக் காசு புதுமனை ஆக்கம் பந்தம் தொடர அண்ணா தம்பி அந்நிய நாடு வர உதவிய ஊக்கம் எந்த நன்மை செய்து விடினும் அந்த மாந்தர் விட்ட பாடில்லாத துக்கம் எக்கச்சக்க செலவாம் நோய் விட்டுப் போக வாய்விட்டுக் கிளறி வெளிநாடெனத் தெரிய தனியார் மருத்துவ- மனையில் இலட்ச இலட்ச நோட்டுக்கு வேட்டு அகதிக்கோ அறுபதுக்கு மேலே, திகதி தெரியாது படுத்த படுக்கையில் தீராத வேதனையோடு அர்ச்சுனா அர்ச்சுனா எனச் சொல்லியபடி திடிரெனப் போனது உயிர் மூச்சு. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து