உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

09.07.24 ஆக்கம் 154 அத்திவாரம் சின்னக் காணி சீர் வரிசைச் சீதனம் பன்னக் காணி பனை வேர் தறித்த சேதனம் பென்னம் பெரியதோர் மனை தொடரப் பேரானந்தமே அன்னமிட்டு வளர்த்த பெற்றோர் சொன்ன வார்த்தை மாற்றாது மங்கல விளக்கேற்றி மூலதனமிட்ட அஸ்திவாரம் ஆனந்தமே என்னென்னவோ திட்டம் முன்னுக்குக் கிணறு பின்னுக்குத் தோட்டம் யன்னலருகே சமையல், குளியலறை என இன்னுமின்னும் எண்ணி அஸ்திவாரம் இட்ட ஆதீனம் இன்று கண்ணுக்குள் நிற்கும் ஆனந்த பவனம் ஆனதே .