உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

11.04.24 ஆக்கம் -311 பூக்களின் பூ வசந்தம் பாக்களின் இதமான சந்தம் போல பூக்களின் பூ வசந்தம் பதமாகவே விதம் விதமாகவே மிதம் சிந்துமே தேக்கி வைத்த இதளின் வாசம் ஆக்கிய நறுமணம் தேசமெங்கும் மணம் வீசும் பூவின் சுகந்தமே பல் இனங்களில் பதமிட்டு புல், பூண்டு முதல் கல்லிடையே விரிந்த அழகு மொட்டுக்கள் சூரியக் கதிர் பட்டுத் தெறித்த சந்தோஷத்தில் அற்புதமாய்ப் புத்துயிர் பெற்று பூத்துச் சிரித்ததே பல நிறங்களில் சிறகடித்து விழிகளிற்கு நல் விருந்தாய் பரவசமூட்டப் பறந்திட்ட வண்ணப்பூச்சிகள் பூ நிறமாய் ஒளித்திருந்து மின்னி மின்னி மனம் குளிர நிறைத்ததே .