உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.02.24 கவி இலக்கம் -305 இப்போதெல்லாம் அன்று சிந்தனையின்றி சிறகடித்துப் பறந்தோம் சிறார்களாய் சந்து பொந்தலாம் ஆடிப் பாடினோம் பாதைகள் நீண்டு எங்கெல்லாம் ஓடினோம் பயணத்தில் நிம்மதி வேண்டித் தேடினோம் இறப்பு ,பிறப்பு ,இளமை ,முதுமை துரத்தும் என இன்று யோசனையில் வாடினோம் அப்போதெல்லாம் வலிகள் சுமக்காது அப்பா,அம்மாவுடன் சோலியின்றி மகிழ சோர்விலாது கூத்தாடினோம் பசியிருந்தும் அரைகுறை வயிறுடன் வறுமை காட்டாது இருப்பதை உண்டு கூட்டுக்குடும்பமாய்க் குதூகலித்தோம் தாயகம் தந்த இனிமை வாட்டி வதைக்க தனிமை வெந்த தாகம் விரட்டோ விரட்ட பனியில் நொந்த நோய் திரட்டிப் பிரட்ட பலரிலும் பதிந்த பார துக்க துயரமே இப்போதெல்லாம் .