உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.01.24 ஆக்கம்-300 தழும்புகள் தொடத் தொட ஆசையோ ஆசை சூடும் மலரில் மூடி வைச்ச அழகு வாடும் இதழில் தொட்ட போது குத்திய முள்ளின் வலி மாறாத் தழும்பு அன்னை மடி தூங்கிய குழந்தை பசி பட்டினியால் உண்ணாத தாயில் பால் சுரக்காத மார்பில் கடித்த தழும்பு படித்துப் பட்டம் பெற்றதும் சந்தோஷத் தழும்பானது இல்லறத்தில் நல்லறம் தேடும் கணவன் ,மனைவியில் தினந்தினம் தேயும் இளமை முதுமை நாடத் தேளாய்க் கொட்டிய தழும்பானது மண்ணீரில் புதைய கண்ணீரில் காலம் நனையத் தன்னுடனே வந்த பொன்னுடலில் அணைத்து இருந்த மாலையில் தொடுத்து இணைந்த பூக்களில் எத்தனை தழும்புகளென எண்ணி வாடியது .