உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

12.10.23 கவி இலக்கம்-286 ஆசிரியம் போற்றுவோம் ஆரம்ப பள்ளி முதல் இறுதிப் பட்டப்படிப்பு வரை படி ஏற்றியவர் அடைக்கலம் தந்து பாதுகாப்புக் கொடுத்து அறிவொளி ஊட்டியவர் வினாவுக்கு வினா தொடுத்து எம்மிலே விடை எடுத்து வீரியம் தந்த வித்தகர் கலை,விளையாட்டுத்துறை, நன்னடத்தை எதிலும் வழி நடத்திய போற்றத்தக்க பெரியோர் எவ்வளவு அக்கறை எம்மில் எக் கறையும் பிடிக்க விடாது அக்கறையாய்ப் படிப்பில் கவனம் எடுத்துக் கரை சேர்த்த அற்புதக் கொடையாளிகள் என்றும் வழிகாட்டியவர் இன்றும் விழியில் முட்டி முட்டி நிற்பவர் என்றென்றும் அன்பு கலந்த நன்றி மறவாது ஆசிரியம் போற்றுவோம் போற்றுவோம் .