உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

31.08.23 ஆக்கம்-281 விழித்தெழு எழும்போது நீ விழுகிறாய் விழும்போது எழுகிறாய் நினைவோடு கனவுகள் காண்பது வழமையே கண்டவை சில நிஜமாகின்றது பல கிடைக்காது போகின்றது விழுபவனைத் தூக்கி நிறுத்த கை கொடுக்க மறுப்பவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான் கிறுக்குப் பிடித்தவன் போல வந்தவை, வராதவை சமாளிக்க படாதபாடுபட்டு வேடிக்கை காட்டும் வினோதம் வயிறு முட்ட உண்டவன் செரிப்பதற்கு அடுத்தவனில் காட்டும் குழப்பம் கூத்தாட விழித்தெழு மனிதா வீரமுடன் அறிவொளியூட்ட புதுப்பொலிவோடு புத்துயிரோடு பூத்துக் குலுங்கிடு மன மகிழ்வோடு மனந் திறந்து முன்னின்று காணும் கனவுகள் சீர்தூக்கி நிறுத்திடு .