உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.06.23 கவி இலக்கம்-275 மரண வலி மண்ணுலகில் வந்தவர்க்கெல்லாம் கண் இமைக்கும் நேரம் விநாடிக்கு விநாடி துரத்திடுமே பணக்காரன் ஏழை எனப் பாராது காத்திருந்து கொத்திடுமே ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது போல் இதற்குப் பெயர்தான் விதியோ இவ் விதி எனும் சதியானது எவ் வீதியிலும் வந்திடுமே மண்ணிலும் நடக்கலாம் விண்ணிலும் விபத்தாகலாம் பிறக்கும் போது பிரசவ வலியானது இறக்கும் போது துறக்க முடியாத மன வலியானது இறைவனுக்குச் சொத்தான மரணமே மனிதனுக்குப் பெரிய தலையிடி ஆனது.