உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.06.23 கவி இலக்கம்-273 வலிகள் மனதில் அடைத்த மூச்சு பேச்சு வராது அழுதிடும் கண்ணீரில் மிதக்கும் வலிகள் ஏராளம் கணப்பொழுதில் துரத்திடும் விபத்து பொத்துப் பொத்தெனப் பிணமாகும் பலிகள் இயற்கை,செயற்கையின் சேதாரம் எங்கும் ஏங்கும் ஆபத்து ஆதாரம் அங்குமிங்கம் இரத்த வெறித் தாகம் அண்ட வெளியை அளக்க முடியவில்லை கொண்ட கோலம் விளக்கத் தெரியவில்லை கண்ட இடமோ கத்திக் குத்து,துப்பாக்கிச் சூடு துவண்ட பாடம் துரத்த வழியில்லை உணர்வற்ற ஊமைப் பசிக்கு உணவாகும் சிறுவர்கள் தணலாகும் நெருப்புத் தெறிக்க தெரிந்தும் தெரியாமல் புரிந்தும் புரியாமல் சுமக்கிறதே மனம் வலிகளுடன்