உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

08.06.23 கவி இலக்கம்-272 எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே தமிழனுக்குத் தமிழே தாய்மொழி குழந்தைகளிற்கு அதுவே உயிர் மூச்சாகும் தரணியில் நிமிரத் தாயின் வடிவம் உயர்த்தும் மொழிப் பேச்சாகும் தமிழைக் கற்கும் சிறுவர் அமுதம் போல சுவைத்து சுவைத்து உண்டால்தான் உதிரமுடன் கலந்த வீச்சாகும் 12 உயிரெழுத்தும்,18 மெய்யெழுத்தும் சேர 216 உயிர்மெய்யெழுத்தும் எழுத்தின் வித்துக்களில் நீர் பாய்ச்சாகும் எழுத்தெனும் வித்தானது முளைத்து மரமாகிப் பூக்கும் சொற்களே உதிர்ந்து மீண்டும் விழுதுகளாகும் முதுகில் புத்தகம் சுமக்கும் சிறுவர் மனதில் அகத்தில் தமிழ் மொழி சுமந்து இனிமையாகப் பேசி மகிழ்வூட்டித் தாகந் தீர்க்கும் எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே முழுமூச்சாகிடுமே .