உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.06.23 கவி இலக்கம்-271 இன்னும் தொடருமா இந்த வாழ்வு நச்சுப் பாம்புகள் நாலு பக்கமும் தாய் மண்ணில் உச்சம் தொடும் வேளை மிச்சம் மீதியின்றிய வாழ்வில் சொச்சமும் கூச்சமின்றிக் கூனிக் குறுகுதே குடியும் கும்மாளமும் கூத்திட பொடியும் போதையும் துரத்திட அடிதடியோ ஆவேஷமாய் நச்சுப் பாம்புகள் திருகுதே குண்டு வீச்சிலும் இன அழிப்பிலும் பிழைத்தது ஏன் என ஏங்குதே வாழ்ந்த நாட்கள் புரியாது மாந்தர் வயிறு எரியவே வாழும் நாட்கள் வீணாகப் போகுதே தாமும் திருந்தாது மற்றவரும் திருந்தவிடாது நாளும் பொழுதும் மூளும் இந்த வாழ்வு சாகும் வரையிலும் என்றுந் தொடருமா