உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.12.22 ஆக்கம்-255 வாழ்வைத் தொலைத்தவர்கள் நிலையான வாழ்வு நீர்க்குமிழியாகுதே வலை வீசிக் காரணமில்லாது காவல்காரரைக் கடுபபேற்றுதே உலை வைக்கும் ஊதாரித்தனம் உலகெங்குமே வெற்றி வேண்டினாலும் தோல்வி தேடினாலும் பொல்லாத போராட்டம் பரிசிலே பரிசுகெட்டுப் போய்ச்சு மனங் கொதிக்க சும்மாயிருந்த மாந்தரையும் கோபமூட்டுதே முழுமூச்சாய் மூர்க்கத்தனமோடு பொது இடம் சீரழித்து சிதை மூட்டுதே வெந்திடும் வெறித்தனம் ஐரோப்பா எங்கும் நாளும் பொழுதும் தொடர் கதையாகுதே நன்றாக வாழும் வாய்ப்பு இழந்து வாழ்வைத் தொலைத்தவர்க்கு எது இலட்சியம் அது அலட்சியம் மத வெறி பிடித்து மனம் அழுக்காகி உலகை விட்டு ஊர்ந்து பெயரிழந்து போகும் உயிருக்கு ஏனிந்தப் பிணவெறி பிறக்கப் போகும் புது வருடமாவது இது தீர்ந்திடுமா.