உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

29.09.22 ஆக்கம்-245 தியாகி தீபச்சுடர் திலீபன் சைவத் தமிழ் வித்தியாசாலை தமிழ் பண்பாட்டுக்கே உதித்த ராசையா வாத்தியார் வெள்ளை வேட்டி ஒரு மூலைத் தலைப்பை ஒரு கை பிடிக்க விசுக்கி விறுவிறுப்பாய் நடக்கும் ஐயாவின் நான்காவது மகன் பலசாலியாய்ப் பிறந்தவன் பாவி பத்தாவது மாதத்தில் தாய் இழந்தவன் அன்னை அரவணைப்பின்றி தாய்ப்பாலன்றி உறவினர் அன்பில் வளர்ந்தவன் குழந்தையாய் பாலர் வகுப்பில் எம்மோடு அருகிலமர்ந்தவன் சொந்த நாட்டின் சோகம் பார்த்து வெகுண்டான் வேங்கையாய்ப் பொங்கி எழுந்தவன் தமிழீழ விடுதலைப் புலியின் அரசியல் பொறுப்பாளனானான் நேரடித் தாக்குதலில் பாய்ந்தது குண்டு பதினான்கு அங்குல குடல் வெட்டப் பட்ட போதும் களத்தில் பத்திரிகையால் கவர்ந்தான் நல்லூர் முன்றலில் ஐந்து அம்சக் கோரிக்கை முன் வைத்து நீராகரமின்றி பன்னிரண்டு நாள் இருநூற்றறுபத்தைந்து மணி நேரம் சொட்டு உமிழ் நீர் விழுங்காது தீபச்சுடராய் விடிவுக்கு சாட்சியாய் விண்ணுலகம் சென்றானே வீரத் தியாகி திலீபன். 35 ஆவது ஆண்டு நினைவாஞ்சலியில் ஆத்மா அடையப் பிரார்த்திப்போமே.