உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

25.08.22 ஆக்கம்-240 தேடும் விழிக்குள் தேங்கிய வலி தேடும் விழிக்குள் தொலைத் தூரமான துயரங்கள் கூடி உறங்கிய உண்மைகள் ஊமையானதே தமிழனாய்ப் பிறந்து குலைந்து போய் வெந்து வெதும்பிய அழிவுகள் அழுது அழுது வீங்கிய கண்களில் என் உறவு எங்கே என ஓலமிடும் ஆண்கள் பெண்கள் நேற்று ,இன்று ,நாளை என்று எத்தனை வருட வலி எங்கு எதைப் பார்த்தாலும் பிரிந்து போன முகங்கள் இன்னும் விடை தராத தாகங்கள் விடையே இல்லாத வினாவிற்குள் தாங்கிய உள்ளமோ தேங்கிய வலிக்கு கண்ணீர் மட்டுந்தானே மருந்தாகின்றது