உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.06.22 அவசர வாழ்வு ஆக்கம்-230 நாழும் பொழுதும் நேரம் பாராது உண்ணாது உறங்காது ஊமையாய் ஓய்வின்றி உழைத்து வாழும் மனிதன் உறக்கத்திலே உயிர் துறக்கும் விதம்விதமான துயரங்கள் எத்தனை ஆசைகளில் மனதின் தேம்பல் இத்தனையும் இனி நடக்குமா என விசும்பல் ஏழையாயிருந்தும் அன்று அத்தனை மகிழ்ச்சி ஆனாலின்று எல்லாமிருந்தும் ஏனிந்தப் புலம்பல் இருப்பது போதுமென்று மனம் நிறையாது இன்னுமின்னும் வேணுமென்ற பேராசை அத்தனை வலி சுமந்து வருத்தம் துறந்து விரலுக்கேற்ற வீக்கம் மறந்து இதய யுத்தமுடன் போராடி அற்ப வயசில் உயிர் குடிக்கும் அவசர வாழ்வில் புத்தம் புதிய உலகந் தேடிடுவாரே