உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.03.24 கவி இலக்கம் -139 மாறுமோ மோகம் மாறுமோ மனங்களின் மோகம் தேறுமோ இனங்களின் தாகம் ஆறுமோ குதர்க்க சோகம் சாறு பிழிய சேறு பூசும் வேகம் நாளும் பொழுதும் நோகடிக்க வாழ்வும் சாவும் மூழ்கடிக்க மாளும் பொழுது கல்லறை கண் திறந்து பேசிடுமா ? பச்சைப் பாலரும் இச்சைக்கு இணங்காத மங்கையரும் செய்த பாவம் என்ன ? பதில் தான் கூறிடுமா ? மூச்சை நெரிக்கும் ஒரு நொடியின் காமுகர் போதை பாதையில் மாறுமா மோகம் ?