உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.01.24 ஆக்கம் 131 பொங்கலோ பொங்கல் தாயக அன்றைய நினைவுடன் தரணியில் பவனி வரும் தமிழர் இல்லமெல்லாம் துயரந் தீரப் பொங்கிப் பங்கிடும் பொங்கல் மாவிலைத் தோரணமிட்டு மாவால் அழகு கோலமிட்டு பாலெடுத்த பானையில் சர்க்கரைப் பொங்கல் பூ,பழம்,பொங்கல் படைத்து பட்டாடை உடுத்து பட்டாசு சுட்டு ஒளித்தீப விளக்கேற்றி பலரும் சுவைக்க இனிக்கும் பொங்கல் விவசாய விளைச்சல் வீச்சிட முழுமூச்சாய் பசு பாட்டு இசைக்கத் தொழுது அக மலரும் பட்டிப் பொங்கல் விழுதாய்த் தொடர்ந்து குழவாய் இணைந்து முழங்கி பொங்கி உண்டு மகிழும் பொங்கலோ பொங்கல் .