உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.10.23 கவி இலக்கம்-118 அலை ஓசை ஆசை எனும் புயலில் ஆணிவேர் சிக்கியதே ஓசை காணும் அசலில் கவி நயம் விளம்பியதே மெத்தைக் கடலின் சொத்தென குத்துக் கரணமுடன் ஆழம் பார்க்குதே முத்து முத்தான நுரையுடன் பார்த்துப் பார்த்து வானளாவு எழும்பி விழுந்து விளையாடி முத்துக்குளியல் போடுதே மழை நீர் கலக்க இடி மின்னல் துலக்க வெடி வெடிப்பினும் கவலையின்றி இடி முழங்குதே அலை ஓசை பட்டும் படாமல் கரை தொட்டு விட்டுப் போகாமல் சொந்த மண் நலம் விசாரித்து சுகம் பெற்ற இன்பமுடன் அமைதியாய் வீடு திரும்புதே அலை ஓசை .