உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

05.09.23 கவி இலக்கம்- 113 விடுமுறை களிப்பு விடுமுறை பலமுறை வந்திடினும் இம்முறை மனதுக்கு களிப்போடு விருந்தானது தாய் மண்ணில் திரும்ப கால் பதித்ததும் துருதுருவென கண்ணும் ,காலும் ஓடியது பிறந்த புகுந்த வீடு வாழை,மிளகாய்த் தோட்டமும் வாலாட்டும் நன்றி உள்ள ஜீவனும் துள்ளி விளையாடும் ஆடு,பூனைக் குட்டியும் அன்றைய ஞாபகம் வந்திடுச்சு நல்லூர், செல்வச் சந்நதி திருவிழாவில் ஐஸ்கிறீம் உண்டு நா ஊறிடுச்சு உற்றார்,உறவினர் ,ஆசிரியர் கண்டு உறவாடியதில் இருந்த நோயெல்லாம் பறந்திடுச்சு இன்றோடு முடியுது விடுமுறை என்றது எரிச்சல் விடுமுறை களிப்பு மீண்டும் எப்போது வருமென ஏக்கமுடன் பெருமூச்சு எறிந்திடுச்சு இதயம்.