உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.08.23 கவி இலக்கம்-111 தலையீடு தலையீடு சிலருக்குத் தாகம் அடுத்தவன் செயலில் புகுந்து உலையைக் கொதிக்க வைக்கும் விவேகம் அது இது படி எனப் பெற்றோர் பிள்ளையை வற்புறுத்தும் வேகம் தோளிற்கு மேல் வளர்ந்தவரைத் துருவித் துருவி பட்டப் படிப்பைக் குழப்பிய சோகம் விவாகம் ஆனவரைத் துரத்தித் துரத்தி வேண்டாத வினையை விலைக்கு வாங்கும் உற்றார் உறவினர் மோகம் கட்டிக் கொடுத்த பின்னும் கொட்டிப் புழுங்கி முட்டி முட்டி கட்டி ஆளும் தலையீடு என்றென்றும் மாறாத மாற்ற முடியாத பெரிய தலையிடி தலையிடியே .