உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.07.23 கவி இலக்கம் -110 இயற்கை அழகான கண்ணுக்கு ஆட்டிப் படைக்கும் விதம் விதமான வர்ண அழகு மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே இயற்கை எனும் விருந்தை ஈன்றெடுத்த இறைவன் கொடை தனி அழகு வானமெனும் நீலக் கடலில் விண்மீன்கள் பரப்பி சூரிய சந்திரனைச் சுழலவிட்டு ஒளியும் இருளும் சூழ்ந்திட்ட இரவு பகல் பேரழகு மாரியும் கோடையும் களைப்பாறவே காலங்கள் பகிர்ந்தது பாரழகு காவியம் படைக்கும் மாந்தர் இடையே ஓவியம் வரையும் பச்சைப் பசேலாய் மரம்,செடி,கொடி,புல்,பூண்டும் பார் போற்றும் வகை வகையான பறவை,மிருகமும் இயற்கைக் கொடைதனில் அழகோ அழகு .