உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.05.23 கவி இலக்கம் -103 முள்ளி வாய்க்கால் முள்ளி வாய்க்காலில் மூழ்கிய சுவடுகள் முள்ளுக் கம்பியில் முனகுதே பத்து மாதம் சுமந்த தாயில் பொத்தென விழுந்த கொத்துக் குண்டால் உடல் கிழிந்து சிசு வெளிவந்ததே உதிரம் பீறி ஊறிட்ட தாயோ உயிரோடு போராட பால் குடிக்கும் சிசுவோ மடியோடு திண்டாடிப் பிழைத்துக் கொள்ளுதே பள்ளிச் சிறுவர்,இளையோர், பெரியோர் என ஏவிய எறிகணையால் உயிருடன் எரிந்து சாம்பலானாரே நரக வாழ்வுக்கு நீதி ஏது உலக வல்லரசுக்கு அநீதி பொது உழைப்பாகுதே முள்ளி வாய்க்கால் தொடர்கதை முடிவல்ல கொள்ளி போடும் தன் இனமே தடியடி கொடுக்க முடிவான இடி ஒன்று வந்திடுமே .