உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.04.22 ஆக்கம்-224 வேண்டும் வலிமை குட்டக் குட்ட குனிந்து கூனிக் குறுகியது போதுமென்று நிமிர்ந்து நிற்கிறது இன்று தன் இனத்துக்காகப் போராடியவனைச் சிதைத்து இரத்தம் குடித்த வரலாறு சீற்றமுடன் சீறுகிறது உணர்வு கொடுத்த தமிழ் பேசியது குற்றமென உருக்குலைத்து ஊமையாயிருந்த உண்மை விதை முளைத்து விருட்சமாய் வளர்கிறது உதைத்தவன் சாவி எம் கையில் ஊர் உலகம் கண் திறக்கையில் ஊக்க வலிமையோடு இனியாவது எம்மண் காத்திட வேண்டும் நித்தம் சீரழியும் பித்தம் பிடித்த அரசில் யுத்தமின்றி புத்தம் புதிய பூரண விடுதலை யுத்தியான புத்தியுடன் கண்டிட வலிமை வேண்டும்