உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ கவி....ரஜனி அன்ரன் (B.A) 08.02.2024 இரண்டாயிரத்தி இருபத்தி நான்கு தேர்தல் ஆண்டாக மிரள வைக்குது உலகை உலகில் எழுபத்தியாறு நாடுகள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பு ஜனநாயகம் தான் ஜெயிக்குமா? மக்களாட்சி தான் மலருமா ? பொறுத்திருந்து தான் பார்ப்போம் நாமும் ! ஒட்டுமொத்த உலகும் எதிர்பார்த்திருக்க சர்வதேச ரீதியில் பொருளாதார நோக்கில் அரசியல் வணிகம் சார்பில் தேர்தல் திருவிழா களைகட்டப் போகுதா? போர்த்தாக்கம் பணவீக்கம் கடன் பிரச்சினைகள் தான் ஒழியுமா? கனவோடு காத்திருப்போம் நாமும் ! ஒருநாள் மகுடம் சூட ஒற்றை விரலுக்கு மைபூசி கற்றையாகப் பணத்தினை வாரியிறைத்து தேர்தலில் வெற்றி பெறும்வரை வாக்குறுதிகளை அள்ளிவீசி வாக்குகளைப் பெற்றுவிட்டு வாக்குப் போட்ட மக்களுக்கு வேட்டும் வைப்பார்களே ! எத்தனை தேர்தல் வந்தாலும் எத்தனை ஆட்சி மலர்ந்தாலும் தேர்தல் திருவிழா தான் களை கட்டினாலும் ஏழைகளின் வாழ்வு என்றும் கண்ணீரிலே ! https://www.youtube.com/watch?v=KxrXrH5mKXE