உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ கைக்குள் கையாக கைத்தொலைபேசி “கவி....ரஜனி அன்ரன்(B.A) 01.02.2024 அலைபேசி யுகமாக அவசரத் தொடர்புச் சாதனமாக அண்டத்தையே கைக்குள் தந்து கண்கவர் வண்ணங்களில் காத்திரமான நுட்பத்தில் கைக்குள் கையாக கையடக்கமாக கைக்குள் தவளும் கைபேசியே தொழில் நுட்பத்தின் அபாரம் நீ ! இளசுகள் பலருக்கும் உன்னில் மோகம் இணையில்லை எதுவும் உனக்கு சிறுசுகள் கைகளில் விளையாட்டுப் பொருளாக பெருசுகள் பலருக்கும் அரட்டையரங்கமாக மக்கள் கைகளுக்குள் நீ அடக்கம் உனக்குள்ளே மக்கள் அடைக்கலம் ! பாதைக்கு வழிகாட்டி நீ பயணத்திற்கு உறுதுணை நீ தனிமைக்கும் துணை நீ தேடலுக்குக் கலைக்களஞ்சியம் நீ தொடர்பிற்குப் பாலம் நீ கையிலே தவளும் கைபேசியே அறிவின் கலங்கரை விளக்கே அத்தனையும் நீதான் அற்புதமும் நீதான் ! https://www.youtube.com/watch?v=Nc3_xvaJdQg