உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ பொங்கும் உளமே தங்கும் தையே “கவி...ரஜனி அன்ரன் (B.A) 18.01.2024 தைமகளே பொன்மகளே தமிழ்த்தாயின் மூத்த தலைமகளே தரணி புகழ் கொண்டவளே தைக்கு தை தவறாமல் வந்து சிந்தை கவரும் சின்னவளே பொங்குதே உள்ளம் உனைக் கண்ட மகிழ்விலே ! உள்ளம் பொங்க உவகை பொங்க உணர்வுகளும் பொங்கியெழ மங்களம் எங்கும் மகிழ்வாய் பொங்க தங்கும் தையே தைரியத் தையே பொங்கி எழுந்திடு புதுமையைத் தந்திடு பொங்கு தமிழாகப் பொங்கி எழுந்திடு ! தைமகள் பிறந்துவிட தைரியமும் கிட்டிவிட புதுவழியும் கிடைத்துவிட தங்கு தடையின்றி எங்கும் சமரசம் மலர்ந்திட புதுமைகள் எங்கும் பூத்திட எண்ணங்கள் வண்ணங்களாய் உள்ளம் பொங்கி வழியட்டும் ! https://www.youtube.com/watch?v=YpWGKilSg9I