உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ தமிழிசை “....கவி......ரஜனி அன்ரன் (B.A) 24.02.2022 இசை ஒருகலை இசைய வைப்பது இசை இசைத்தமிழாய் வாசம் செய்யுது தமிழிசை நோய்க்கு மருந்தாக நொந்த உள்ளங்களுக்குத் தெம்பாக மனதிற்கு மகிழ்வாக மங்கலத்திற்கு துணையாக மதுரத் தமிழுக்கு மகுடம் சூட்டியது தமிழிசை ! உலக மொழிகளை இசை வாசம்செய்தாலும் இசைத்தமிழாக இசைந்து நின்று தமிழை இசைக்கிறது தமிழிசை தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை தமிழிசைக்கு இலக்கணம் வகுத்தது அகத்தியம் தமிழிசையைப் பட்டை தீட்டியது பரிபாடல் ! செம்மொழிக்கு செழுமை சேர்த்தது ஏழிசை பரமனைப் புகழ்ந்து பாட பண்ணிசை பண்ணுக்கு இனிமை சேர்க்க இன்னிசை பாவினத்தை வனப்பூட்ட தாழிசை பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பது தமிழிசை ! தாலாட்டோடு தொடங்கும் மனிதவாழ்வு சீராட்டுக்களோடு இசையோடு இசைந்து மிடுக்கோடு பாசுரங்களில் பண்ணாகி பரிமாணத்தோடு இசையாய் பாடலாய் கூத்தாய் பயணித்து இறுதி நீராட்டு இசையோடு முழுமை பெறுகிறதே மனிதவாழ்வு !