உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

மனிதத்தின் நேயமே ! கவி....ரஜனி அன்ரன் (B.A) 07.12.2023 மனிதத்தின் நேயமே மானிடச் சுவாசம் மனிதனை மனிதன் மதித்தலும் மனித நேயம் பேணலும் மகத்தான நேசம் ! அன்று மனிதநேய விழுமியங்கள் மானிட வாழ்வைச் சீர்ப்படுத்த இன்றோ வர்க்க பேதங்கள் பெருகி வன்முறைகளும் வெடித்து அதிகாரங்கள் போட்டியாகி குரோதங்கள் வன்மமாகி மனிதமும் தொலைந்து போயாச்சு மனிதநேயமும் அருகிப் போயாச்சு ! வாழ்க்கை என்பது போராட்டம் வாழ்வியல் பாதையோ நீரோட்டம் வாழ்க்கையோ ஒருமுறை வாழ்வோம் மனிதநேயத்தோடு கை கொடுப்போம் நேசத்தோடு மலரட்டும் எங்கும் மனிதநேயம் மனிதத்தின் நேயமே மகத்துவ நேசம் ! https://www.youtube.com/watch?v=TPHaNkQaEtA