உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ செங்காந்தள் மலர்கள் “ கவி.....ரஜனி அன்ரன் (B.A) 30.11.2023 கார்கால கார்த்திகையில் கனமழை பொழிகையில் மண்ணினுள் வேரோடி வேலிகளில் படர்ந்து கொடியாகி காவல் தெய்வங்களை ஆராதிக்க ஆண்டிற்கு ஒருமுறையாக அழகாகப் பூத்துக் குலுங்குமே செங்காந்தள் மலர்கள் ! செங்குருதி நிறத்தோடு பொன்மஞ்சள் வண்ணம் தாங்கி அகல்விளக்காய் ஒளிர்ந்து கார்த்திகை மைந்தர்களை கைகூப்பி தொழுகிறதே செங்காந்தள் மலர்கள் ! பழந்தமிழர் இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்களில் புறநானூற்று வீரத்தில் கலந்து தேசத்தின் தேசீயப் பூவாக தேச மைந்தர்களின் ஆராதனைப் பூவாக பூத்துக் குலுங்குமே செங்காந்தள் மலர்கள் ! https://www.youtube.com/watch?v=bA1YdMDu6ss