உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ இரத்தம் சிந்திய யுத்தம்……..கவி...ரஜனி அன்ரன் (B.A) 19.10.2023 இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த சிக்கலான யுத்தம் நீண்டகாலப் போராட்டம் நீதிக்கான போராட்டம் நூற்றாண்டுக் கால மோதல் நொட்டிப் பார்த்து சீண்ட நொடிப் பொழுதில் வெடித்தது போர்மேகம் இரத்தம் சிந்திய யுத்தமாகி இசைவிருந்தை இறுதி விருந்தாக்கியதே ! யூதர்களின் பூர்வீகம் அரேபியரின் சொந்தமென நாடு இரண்டாகப் பிளவுபட ஜெருசலேம் சர்வதேச நகரமாகி மும்மதங்களின் புனிதத் தலமாகி நிற்க உனக்கா எனக்கா நாடு சொந்தமென தொடர்கிறது யுத்தமும் ! நிலப்பசியின் வன்மம் ஆயுதங்களால் அச்சுறுத்தி குண்டுமழை பொழிந்து ஆயிரமாயிரமாய் அப்பாவிகளைக் கொன்று நிலமெல்லாம் இரத்தம் பாய மரண ஓலங்கள் உலகையே உலுக்குது அமைதியெனும் ரோஜா மலரட்டும் ஐ.நா.வே ஐக்கியத்தோடு நிறுத்திவிடு யுத்தத்தை ! https://www.youtube.com/watch?v=bjD5PLrDTJ4