உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ வழிகாட்டிகள் “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 12.10.2023 அன்னை தந்தையை அடுத்து அறிவொளியை எமக்குக் காட்டி அறியாமையை அடியோடு அகற்றி திறமைகளைக் கண்டுணர்ந்து வற்றாத கல்விச் செல்வத்தை வாரித்தந்து விழி திறக்க வைத்து வாழ்வில் ஒளியேற்றிய வழிகாட்டிகள் எம் ஆசான்களே ! பள்ளியின் இருப்பிற்கும் மாணவர் உயர்விற்கும் தேச வளர்ச்சிக்கும் தேர்வின் வெற்றிக்கும் அச்சாரமாகி கற்றலின் வித்தைகளைக் கச்சிதமாக்கி அற்புதமாய் அள்ளித் தந்து கல்வி ஒளியூட்டிய வழிகாட்டிகள் ஆசான்களே ! கல்வியொடு ஒழுக்கத்தையும் பண்பினையும் கண்ணியமாய் எமக்களித்து வெற்றுத் தாளாய் இருந்த எமை புள்ளிக்கோலம் போட வைத்து அழகு பார்த்த ஆசான்களே – நீவிர் பண்ணிய தியாகங்கள் எண்ணிலடங்கா ஒளியூட்டிய வழிகாட்டிகளே நன்றி உமக்கு ! https://www.youtube.com/watch?v=usrMbMyvZ4A