உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ விடுமுறை வந்தாலே “ ........கவி.....ரஜனி அன்ரன் (B.A) 20.07.2023 வாடையை விரட்டி வசந்தத்தைத் தந்த கோடை கொடையாய் கிடைத்ததே எமக்கு கோடை விடுமுறை வந்தாலே கொண்டாட்டம் கும்மாளமென கோவில் திருவிழாக்கள் களைகட்ட குடும்ப விழாக்களும் கலகலக்க பள்ளிக்கும் பணிக்கும் விடுப்பாக குடும்பமாய் கூடிமகிழும் விடுமுறை காலமிது ! இயற்கை அழகை ரசித்து மகிழ இயந்திர வாழ்விற்கு இடைவேளை கொடுக்க இயற்கையோடு பொழுதைக் கழிக்க உறவுகளோடு உறவாடி மகிழ பயண அட்டையும் கைகொடுக்க மகிழ்வாய் வந்ததே கோடை விடுமுறையும் ! வசந்த காலமதை சுகந்தமாக்கி படகுப் பயணத்தை மேற்கொள்ள சுற்றுலாத் தளத்தினைச் சுற்றிவர சுமைகளை எல்லாம் இறக்கி வைக்க வரமாய் கிடைத்தது கோடை விடுமுறை கோடை விடுமுறை வந்தாலே கொள்ளை இன்பமே ! https://www.youtube.com/watch?v=vByEQVnplhg