உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் “...கவி..ரஜனி அன்ரன் (B.A)25.05.2023 அறிவுச் சுரங்கம் ஆசியாவின் பொக்கிஷம் அனலுக்குள் பொசுக்கி சாம்பல் மேடாக்கி ஆண்டுகள் நாற்பத்தியிரண்டும் ஆனதுவே மாறாத வடுவின் நீச்சமிது ஆறாத் துயரத்தின் உச்சமிது நீறாக்கிப் போட்டனரே நீசர்கள் ! நாற்பத்தியிரண்டு ஆண்டுகளுக்குள் நாலாவிதமான நிகழ்வுகளும் அரங்கேற கலவரங்கள் புலம்பெயர்வுகள் எனத் தொடர கண்டங்கள் ஐந்திலும் மக்களும் வாழ கரம் கொடுத்து பலரும் உதவ எரிந்த சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து நிமிர்ந்து நிற்குதே எழிலோடு புதுப்பொலிவோடு இன்றும் அதேயிடத்தில் அறிவாலயம் ! வெந்து தணிந்தது வேரின் அடையாளம் தீயில் பொசுங்கியது நூல்கள் மட்டுமே தீராத அறிவிற்கு அழிவில்லை என்றும் அடையாளம் அழிந்தாலும் அழியவில்லை அறிவு அள்ளியே கொடுத்தனர் நூல்களை மக்களும் பெருகியது படைப்புக்களும் படைப்பாளர்களும் பூத்துக் குலுங்கியது மீண்டும் மிடுக்கோடு அறிவாலயம் ! https://www.youtube.com/watch?v=FmqrDBjhszc