உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ வலிசுமந்த நாள் “...கவி...ரஜனி அன்ரன் (B.A) 18.05.2023 பெருவலி சுமந்து பேரிடர் நடந்து மாறாத வடுவாகி மனதில் ரணமாகி மேகக் கூட்டம் கரும்புகையாகி மேதினியே உறைந்து நின்ற மே பதினெட்டாம் நாள் ஆண்டுகள் பதினான்கு ஆனபோதும் ஆறவில்லை இன்னும் காயங்கள் ! முள்ளி வாய்க்காலில் மூச்சடங்கியவர்க்கு முத்தான சொந்தங்களை தொலைத்தவர்க்கு உறுப்புக்களை உடமைகளை இழந்தவர்க்கு உறுதுணையாக வேண்டும் நீதி உரிமைகளுக்கு வேண்டும் தீர்வு தொடர்கிறது நீதிக்கான போராட்டமும் கிட்டவில்லை இன்னும் தீர்வுகளும் ! சிறைக் கைதிகளை மீட்டிட மனக் காயங்களை ஆற்றிட காணாமற் போனோரை மீட்டிட ஒட்டுமொத்த உறவுகளும் ஒன்றுகூடி ஒற்றுமையோடு குரல் கொடுத்து நீதிக்காய் போராடி வீதியில் நிற்போர்க்கு மடிந்த உறவுகளுக்கு வலிசுமந்த நாளில் விடிவொன்று கிடைத்திட வழிசெய்வோம் ! https://www.youtube.com/watch?v=gQVj49t4oHw