உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

< “ பூக்கட்டும் புன்னகை “......கவி....ரஜனி அன்ரன்(B.A) 03.02.2022 பூத்த புத்தாண்டில் புதுமைகள் பிறக்கட்டும் நேற்று நடந்தவைகள் கனவாய் போகட்டும் தொற்றுக்களும் தோற்றுப் போகட்டும் மன இறுக்கங்கள் தளரட்டும் மாற்றம் கண்டு மகிழ்வு பெருகட்டும் வெற்றிகள் பலவும் வந்து சேரட்டும் பூங்காற்றும் மெல்லத் தவழட்டும் புன்னகைப் பூக்களும் பூத்துக் குலுங்கட்டும் ! மொழிகளில் உரைக்காத காவியம் விழிகளில் ஒளிரும் ஓவியம் வசீகரத்தின் வற்றாத ஜீவிதம் வார்த்தைகள் இன்றிய மெளனம் உதடுகளுக்கே உரித்தான தனித்துவம் புன்னகை எனும் மகத்துவம் ! மழலையின் புன்னகையில் குதூகலம் மின்னும் மங்கையின் புன்னகையில் காதல் அரும்பும் பாட்டியின் புன்னகையில் அனுபவம் தெறிக்கும் இதழ்களை மெல்ல விரியுங்கள் புன்னகைப் பூக்களைச் சொரியுங்கள் புத்துணர்வோடு வாழுங்கள் பூக்கட்டும் எங்கும் புன்னகைப் பூக்கள் !