உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ உழைப்பு “....கவி....ரஜனி அன்ரன்(B.A) 04.05.2023 உழைப்பின் வாசமே உழைப்பாளிகளின் சுவாசம் உடலை இயந்திரமாக்கி உழைப்பை உரமாக்கி உழைக்கும் வர்க்கமே உன்னதமான உழைப்பாளிகள் உலகம் இயங்க உயிர்கள் வாழ உழைப்பாளிகளின் கடின உழைப்பே உறுதுணை ! உடலும் மனமும் வலுவடைய மனிதனைப் பண்படுத்துவது உழைப்பு தன்னம்பிக்கை உணர்வை ஊட்டி சாதனைத் தடத்தினை எட்டிப்பிடிக்க அச்சாரமானது உழைப்பு வாழ்விற்கான அழைப்பே உழைப்பு ! இயற்கை கூட கற்றுத் தருகுது உழைப்பு எனும் பாடத்தை உதயசூரியன் உதித்தால் தான் வெளிச்சம் வியர்வை சிந்தி உழைத்தால் தான் விரைவில் கிட்டும் வெற்றிக்கனி உழைப்பே உயர்விற்கு வழி உழைப்பே நல்வாழ்விற்கு விழி ! https://www.youtube.com/watch?v=y-91pU0eNN0