உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ பூமித்தாய் “....கவி...ரஜனி அன்ரன் (B.A) 20.04.2023 அழகான ஒரு கோளம் அடுக்குகள் கொண்ட மாடம் அடைக்கலம் தந்த கூடம் அதிசயங்கள் நிறைந்த தடாகம் ஆதவனைச் சுற்றிவரும் ஆரணங்கு - இவள் ஆதியாய் உதித்த அன்னை பூமித்தாயே ! இறைவன் அளித்த வரம் இயற்கை தந்த பொக்கிஷம் உலகையே சுமக்கும் தாய்மடி உன்னதமான பூமித் தாய்மடி பூமித்தாய்க்கென ஓர் தினத்தை முத்தாப்பாய் தந்ததே ஐ.நா மன்றும் சித்திரைத் திங்கள் இருபத்தியிரண்டினை ! எழில் மிகுந்து சோலைகள் மலர்ந்து எண்ணற்ற வளங்களை அள்ளித் தந்து எண்ணூறு கோடி மக்களையும் எண்ணில்லா ஜீவராசிகளையும் கண்போல காத்து தன்மடியினில் சுமந்து உயிர்வாழ வைக்கும் உத்தமியை உரமான வரமாகக் கிடைத்த பூமித்தாயை உணர்வோடு வளம் சேர்ப்போம் என்றும் ! https://www.youtube.com/watch?v=-_mNCMKciZ8