உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ தமிழர் கலையாம் தமிழிசை “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 23.02.2023 தமிழுக்குப் பெருமை சேர்ப்பது தமிழிசை தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை இயல் இசை நாடகமாகி முத்தமிழாய் இசையும் கூத்தும் இணைந்து இசைத்தமிழாய் இரண்டறக் கலந்தது வாழ்வோடு தமிழிசை ! ஆதியான தமிழிசைக்கு ஆதாரமாய் இலக்கணம் வகுத்தது அகத்தியம் தொன்மைக்கு சான்றானது தொல்காப்பியம் புத்துயிரானது பக்திப்பனுவல்கள் பாசுரங்கள் கலங்கரை விளக்கானது சிலப்பதிகாரம் மறுமலர்ச்சியைச் செய்தாரே பாரதியாரும் ! இசையைத் தொழிலாக்கி தொழிலுக்கு இசைக் கருவியானது பறை பொழுதை இன்பமாய்ப் போக்க யாழை இசைத்து மக்கள் மகிழ தமிழிசைக்கு இலக்கணம் தந்தது யாழ்நூல் ! முத்தமிழின் நடுநாயகமாம் தமிழிசை தாலாட்டோடு தொடங்கி நீராட்டு வரை தமிழர் வாழ்வோடு பயணித்து தமிழிசையாகித் தரணியை ஆளுது தரணியெங்கும் தமிழிசை முழங்கட்டும் மண்வளக் கலைகளும் மகுடம் சூடட்டும் ! https://www.youtube.com/watch?v=Qq3iVf3-pno