உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ புழுதி வாரி எழும் மண்வாசம் ”...கவி..ரஜனி அன்ரன் (B.A) 16.02.2023 புழுதி வாசம் வீசுது புள்ள பொழுதும் விடிஞ்சு போச்சு புள்ள வயற்காடு போக வேணும் வாடி புள்ள சேர்ந்து போவம் ! தூக்கம் கண்ணைத் தழுவுது மாமா தூறல் கொஞ்சம் நிற்கட்டும் துள்ளிக் குதித்து வாறேன் நானும் தள்ளிக் கொஞ்சம் நில்லு மாமா ! செக்கலுக்க போனாப் புள்ள சீக்கிரமாய் நாத்தும் நட்டு பாத்திக்கும் தான் தண்ணி விட்டு பகலுக்க வந்திடலாம் பரிசமும் போட்டிடலாம் ! முறுக்குமீசை கொண்ட மாமா சுறுக்காக நானும் வாறன் நறுக்கான கதைகள் பேசி வயற்காடு போவம் மாமா ! வயற்காடு கலகலக்க வாய்க்கால் தண்ணி சலசலக்க சிட்டுக்கள் நாம் சிறகடித்து சேர்ந்து போவம் வாடி புள்ளே ! https://www.youtube.com/watch?v=47vjN80Ryys