உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ இசையரசி “....கவி...ரஜனி அன்ரன் (B.A) 09.02.2023 இசைத் துறையின் பொக்கிஷம் இந்தியத் திரையிசையின் இசையரசி இசைஞானம் மிக்க கலைநாயகி திரையிசையில் பொன்விழாக் கண்ட கலையரசி தேசீய விருதுகளை மூன்றுமுறை பெற்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பத்மபூசண விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்ட வேளை பறித்துச் சென்றானே காலனும் விரைந்து ! இசையரசியின் இசைப்பயணம் எழுதிவிட முடியாக் காவியம் ஏழு ஸ்வரங்களையும் இசைத்த இசைவாணி சங்கதிகளை இசைத்துப் பாடி சங்கீத உணர்வோடு இசைத்த குயில் பாடாத மொழிகள் எதுவுமில்லையே ! தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்த்து தமிழிசையால் எமைக் கட்டிப் போட்டு தாயகக் கானங்களை எமக்காய் பாடி தலைமுறைகள் நான்கோடும் பயணித்து இசைவானில் இரண்டறக் கலந்துவிட்ட இசையரசியின் இசைப்பயணம் இனிய கீதங்களாய் என்றும் ஒலிக்கும் இசையரசியின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பே ! https://www.youtube.com/watch?v=QIVyu9Z4ESc