உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ உயிர்நேயம் “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 08.12.2022 மனிதம் பேண வர்க்க பேதமின்றி மனிதநேயத்தோடு உயிர்நேயம் காத்து மாந்தரை மாந்தராய் மதித்து மனுக்குலத்தை நேசித்து உயிர்நேயம் பேணலே மனித உரிமையின் தார்மீகம் ! இன்னல்கள் நேரும் போதெல்லாம் தன்னலம் இன்றியே மன்னுயிர்களையும் காத்து சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்து மனுக்குலத்தை நேசிப்போம் மறவாது காத்திடுவோம் உயிர்நேயம் ! ஜனநாயகத்தின் ஆணிவேர் மனிதஉரிமை மனித உரிமைக்கு அடிநாதம் உயிர்நேயமே மனித உரிமையே மானிடர்க்குப் பெருமை உன்னதமானது உயிர்நேயம் உயிர்நேயம் காத்தல் மாந்தர் கடமை ! உயர்வு தாழ்வு ஒழியட்டும் உன்னத தர்மம் நிலைக்கட்டும் உயிர்நேயம் வளரட்டும் மலரட்டும் மண்ணில் மனிதநேயம் காத்திடுவோம் என்றும் உயிர்நேயம் ! https://www.youtube.com/watch?v=mxfLiFst3x8