உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ பன்மொழிகளே பலம் “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.09.2022 பன்மொழி போற்றும் புரட்டாதித் திங்கள் பாங்குடனே விடைபெறும் வேளை பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாளாம் புரட்டாதித் திங்கள் முப்பதாம் நாளை பல்லுலகிற்கும் அறிவித்து மகிழுது ஐ.நா.மன்றும் ! எண்ணத்தின் வெளிப்பாடாகி சிந்தனையின் ஊற்றாகி உணர்வின் கலவையாகி உன்னதமாகி தொடர்பாடலுக்கும் பரிமாறலுக்கும் பாலமாகி மொழியப்படுவதே மொழி பன்மொழிக் கல்வி புரிதலை ஊக்குவித்து நல்லுறவிற்கு வழி வகுக்குமே வாழ்வியல் மொழி தாய்மொழி - என் வாழ்விட மொழியோ டொச்மொழி ! பல்லின மக்கள் வாழும் புலத்து வாழ்வினில் பல்லினக் கலாச்சாரமும் மிளிர பன்மொழிகளை நாமும் கற்றால் பலதையும் பத்தையும் அறியலாம் பயனுறு வாழ்விற்கும் வலுவாகும் பன்மொழிகளே எமக்குப் பலம் பன்மொழிகளையும் கற்போம் தாய்மொழியோடு வாழ்வோம் !