உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ பேசாமல் பேசும் உலகமொழி “....கவி....ரஜனி அன்ரன் (B.A) 22.09.2022 மனித குலத்தின் ஆதிமொழி ஆதிமனிதனின் ஆட்சிமொழி மொழிகளுக்கெல்லாம் வழி சமைத்தமொழி கண்ணாலே காவியம் சொல்லி கைவிரல் அபிநயத்தை கலைநயமாக்கி பேசாமலே பேசும் உலகப் பொதுமொழி சைகை மொழியெனும் மெளன மொழியே ! செவிப்புலன் அற்றோர்க்கு எல்லாம் விழிப்புணர்வு கொடுத்த மொழி இனமதம் கடந்த பொதுமொழியாகி பல்லுலகும் பேதமின்றியே பேசும்மொழி தொல்லுலகில் எழுபது மில்லியன் பேருக்கு கைகொடுத்த நிசப்தமொழி சைகை மொழியெனும் மெளனமொழியே ! எண்ணக் கருக்களை வெளிப்படுத்த வண்ணத் தகவல்களைப் பரிமாறிட அங்கங்களை அசைவாக்கி அபிநயத்தால் புலப்படுமே சைகைமொழி சைகை மொழியை நாமும் கற்று கேட்க பேச முடியாதோர்க்கு வழிகாட்டி வல்லமையோடு அவர்கள் வாழ வாழ்வில் ஒளியேற்றுவோம் நாமும் !