உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ மனிதநேயம் “......கவி......ரஜனி அன்ரன் (B.A) 18.08.2022 மனிதனை மனிதன் மதிக்க மன்னுயிர்களைத் தன்னுயிராய் காக்க காருண்யம் கருணையைப் பேண தன்னைப் போல் மற்றவரையும் நேசிக்க மனிதநேயம் காத்து மாந்தராய் வாழ புனிதமாய் தந்ததே ஐ.நா.மன்றும் ஓகஸ்ட் பத்தொன்பதாம் நாளை அனைத்துலக மனிதநேய தினமாக ! பசியினால் துடிப்போர்க்கு பசியாற்றி பாதையில் விழுந்தோர்க்கு கைகொடுத்து பார்வை இழந்தோர்க்கு வழிகாட்டி பக்க துணையாக இருப்போம் பயணிப்போம் என்றும் மனித நேயத்துடன் ! அரிதான மானிடப் பிறப்பினில் மாய விம்பத்தை நீக்கி மனித நேயத்தைக் காத்து பேதமின்றியே வாழ்ந்து புதுவேதம் படைப்போம் வற்றாத ஜீவநதியாக எங்கும் வளமாகப் பாயட்டும் மனிதநேயம் மனித நேயமே மாந்தர்க்கு அழகு மனுதர்மமே வாழ்விற்கு செழிப்பு !