உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ பசி “......கவி....ரஜனி அன்ரன் (B.A) 11.08.2022 கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை பாமரர் வாழ்வினிலோ பெரும் கொடுமை யாருக்கும் வரக்கூடாதே இந்த வறுமை வயிற்றினைப் புகைய வைத்து வாழ்வினை முடித்திடுமே இந்தப்பசி ! பசியின் வலி தெரியாதோர் பஞ்சணையில் புரள பசியோடு துடிப்பவரோ தெருவிலே அலைய பாழும் உலகும் கண்டு கொள்வதில்லையே இதை உணவின் வாசமும் பசியினைத் தூண்ட பசியெனும் உணர்வு வலியாகி வாட்டி எடுக்குமே வயிற்றினையும் ! பெற்ற பிள்ளையின் பசியைப் போக்க சட்டெனவே தந்தை செய்த செயல் உற்ற நேரத்தில் உதவிய முதலாளி உடன் உதவிய உறவின் மனிதாபிமானம் குற்ற உணர்வோடு கூனிக்குறுகி நின்ற காட்சி குழந்தையின் கள்ளமற்ற பேச்சு மனதையும் நெகிழ வைத்ததே ! நிஜத்தின் தரிசனத்தை இளகிய மனத்தை தன்மானத்தினை மகளின் எதிர்காலத்தினை சுயமரியாதையின் மதிப்பினை மனிதாபிமானத்தின் மாண்பினை தெளிவாக்கியதே காட்சிப்பதிவு பசித்தோர்க்கு உணவளித்து பண்பாடு காத்து இல்லாதோர்க்கு இரு கரமும் கொடுத்திடுவோம் !