உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ தேடும் உறவுகள் “......கவி......ரஜனி அன்ரன் (B.A) 04.08.2022 காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கைது செய்யப்பட்ட சொந்தங்களை தேடித் தேடி நிதமும் களைத்து உணர்விழந்து உடல் மெலிந்து உளம் நலிந்த போதும் உறவுகள் வருவார்கள் எனும் நம்பிக்கையில் தொடர்கிறது தேடல் இன்றும் விடையின்றியே ! ஆண்டுகள் பன்னிரெண்டைத் தாண்டியும் நீதி இன்னும் கிடைக்கவில்லை நிம்மதியும் தான் கிட்டவில்லை காலம் தாழ்த்தியபடி கண் துடைப்பாய் நகருதே தேடும் உறவுகளின் வாடும் நினைவுகள் ! தனிமையெனும் கொடியநோயும் வாட்ட குடும்ப சுமைகளும் பாரமாக தவித்திருக்கும் குடும்பங்கள் வாழ்வே விரக்தியாகி வாழ்வினை நகர்த்துகின்றார் ஏக்கத்தோடு தேடும் உறவுகள் வந்திடுவாரெனும் தேக்கமான நினைவுகளோடு !