உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ தந்தையெனும் விந்தை “ கவி......ரஜனி அன்ரன்....(B.A) 26.05.2022 தந்தையர் நாடாம் ஜேர்மனியில் தந்தையர் தினமாம் ஆயிரம் கனவுகளை ஆழ்மனதில் சுமந்து அன்பினை மனதில் பூட்டி தூரமாய் நின்று ரசித்திடும் பாசக்காரத் தந்தையை தந்தையெனும் விந்தையை நேசத்தோடு நினைத்திடுவோம் ! முதலெழுத்தின் முகவரியாகி மெழுகாய் உருகி முழுதாய் சுமந்து சக்கரமாய் சுழன்று எமக்காய் வாழ்ந்த தந்தையெனும் விந்தையை தன்னலமில்லாத் தியாகியை உழைப்பின் உன்னதரை உவகையோடு நினைத்திடுவோம் ! கண்டிப்பை எமக்குக் காட்டி கருணையைப் பூட்டி வைத்து கஸ்டத்தை மனதில் புதைத்து கடினமாய் உழைத்த ஜீவனை அதிசயமான புத்தகத்தை ஆற்றலின் வல்லாளனை ஆழமாய் நேசிப்போம் என்றும் !