உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ரஜனி அன்ரன்

ரஜனி அன்ரன்

“ வேண்டும் வலிமை “ கவி......ரஜனி அன்ரன் (B.A) 28.04.2022 வலிமையே வாழ்விற்கு உரம் உடல்வலுவும் உளவலுவும் ஒருங்கு சேர உண்டாகுமே வலிமை வளமான வாழ்வினை உரமாக்க சிறப்புக் குழந்தைகளைப் பொறுப்போடு வளர்க்க பெற்றோர்க்கு என்றும் வேண்டுமே வலிமை ! தனித்தன்மை கொண்ட குழந்தைகளின் தனித்துவத்தை அடையாளம் கண்டு தனித் திறமைகளை வளர்க்கப் பயிற்சிகள் பலதையும் கொடுத்து எழுதப்பேச கதைக்க கற்றுக் கொடுத்தால் மேதாவிகள் ஆக்கிடலாம் மேதினியில் ! சிறப்புக் குழந்தைகளின் திறன்களை வெளிப்படுத்த தடைகளைத் தாண்டி நடைபோட எதிர்நீச்சலோடு சமூகத்தில் போராட பெற்றோர்க்கு வேண்டுமே வலிமை ! பாமுக அதிபரின் பாரிய பணியாக அழகிய மலர்களை அரவணைத்து அவர்களின் திறமைக்கு களம் கொடுத்து ஆற்றல்களை ஆளுமைகளை பாமுகத்தில் அரங்கேற்றி மகிழ்கிறார் வலிமையோடு !